கல்வி
1.பல்கலைக் கழகம்
யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காகப் ஒருதொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார்வீதியில் வவுனியா நகரத்திலிருந்து 8km தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப் பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளப்போதிலும் உள்ளநாட்டு யுத்தம் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
இதை விட வவுனியா குருமன்காட்டிலும் விஞ்ஞானபீட்ம மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்ளவட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.
2.பாடசாலைகள்
1.வவுனியா மகாவித்தியாலயம்
2.வவுனியா விபுலாநந்தா கல்லூரி www.vipulananthanrkalakam.com
3.ஓமந்தை மத்திய கல்லூரி
4.இறம்மைக்குளம் மகளீர் கல்லூரி
5.சைவப்பிரகாச வித்தியாலயம்
6.வவுனியா சர்வதேசப் பாடசாலை
7.வவுனியா இந்துக் கல்லூரி
8.வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்
9.வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகாவித்தியாலயம்
3.தொழில் நுட்பக் கல்லூரி
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.
4.தேசிய இளைஞர் சேவைகள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆனது இளைஞர்களை வலுவூட்டும் நோக்கோடு விளையாட்டு துறை மட்டுமன்றி கல்வி அறிவையும் விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து தேசிய ரீதியிலான சான்றிதழை வழங்குகின்றது இங்கு தகவல் தொழிநுட்பம் , radio ,tv என்பன திருத்துதல் தொடர்பான பயிற்சி நெறி, கட்டடக்கலை போன்ற பயிற்சிகள் நடைபெறுகின்றன .
5.தனியார் கல்வி நிலையங்கள்
இன்றைய கால கட்டத்தில் இவை மாணவர்களின் கல்வி அறிவை வளர்ப்பதில் பெரும் பங்கை வகிக்கின்றன. பாடசாலை மாணவர்கட்கு மட்டுமன்றி பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கும் இவை உதவுகின்றன . கணணி கல்வி நிலையங்கள் பரவலாக உள்ளன .
தொலைத் தொடர்பு
1.அஞ்சல்
வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
2.தொலைபேசி
குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத்
தொடர்பு கொள்ள).
- ஆரம்பிக்கும் இலக்கங்கள்
- 024-2 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
- 024-4 வவுனியா சண்ரெல்
- 024-5 வவுனியா லங்காபெல்
- 060-224 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA இணைப்பு
கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம் பெருமளவில் கம்பி இணைப்புக்களை வழங்கி உள்ளது
கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)
- CDMA இணைப்புக்கள்
- சண்ரெல்
- இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
- லங்காபெல்
- TDMA (GSM) இணைப்புக்கள்
- மோபிற்றல், இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
- டயலொக்
- ஹட்ச்
3.இணைய இணைப்பு
அக்டோபர் 2007 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய இலக்கங்களுக்கு அகலப்பட்டை இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4.தொலைக்காட்சி
வவுனியாவில் இந்தியாவின் சண் (Sun) மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் மீள் ஒளி பரப்பு நிலையம் அமைந்துள்ளது. ஆயினும் இவற்றின் சட்ட அனுமதி சம்பந்தமாக தெளிவான நிலையில்லை. இது தவிர அதிகாரப்பூர்வமாக தமிழ் தொலைக்காட்சியொன்றை நடத்துவதற்கு முன்னோட்டம் ஒன்றும் பல மாதங்களாக நடந்தவண்னமுள்ளன.
5.வானொலிகள்
- இலங்கை வானொலி -வன்னிச்சேவை
- பண்பலை நாதம்
- வன்னியின் குரல் -வர்த்தக விளம்பரசேவை
6.பத்திரிகைகள்/சஞ்சிகைகள்
- நிலம் -கவி இதழ்
- தேடல் -இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
- பூங்கனி -மாதமொருமுறை
மத வழிபாட்டுத் தலங்கள்
வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தளங்கள் உள்ளன.
இந்து மதம்
- கோயிற்குளம் சிவன் கோயில் (அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அருளகம்)
- குருமண்காடு காளிகோயில்
- வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
- பழனி மலை முருகன் கோயில்
கிறீஸ்தவ மதம்
- கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
போக்குவரத்து
வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கோ அல்லது மன்னார் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் மற்றும் தனியார் ஊர்திகள் வேறுமாவட்டங்களிற்குச் செல்வதானால் தேக்கவத்தையில் பதிவினை மேற்கொள்ளவேண்டும். இதற்கு
- வாகன அனுமதிப்பத்திரம்
- காப்புறுதிப் பத்திரம்
- சாரதி அனுமதிப்பத்திரம்
- அடையாள அட்டை
ஆகியவற்றின் பிரதிகளை காவற்துறைக்குச் சமர்பித்தல் வேண்டும். பின்னர் ஏற்கனவே வேறுமாவட்டத்தில் இருந்து வந்திருந்தால் வரும் போது தந்த மஞ்சள் துண்டைக் காட்டும் மாறு கோரப்படும். சோதனை சுமார் 1 மணித்தியாலத்தில் இருந்து 1 12 வரை செல்லும். இச்சோதனை முடிவில் இறுதியில் தேக்கவத்தை காவற்துறை அலுவலகத்தில் பதிவை மேற்கொண்ட பின்னர் 10 நிமிடங்களுக்குள் ஈரற்பெரியகுள சோதனைச் சாவடியை அடைதல் வேண்டும். 15 நிமிடம் எடுத்தாலோ அல்லது அதற்கு மேற்பட்டாலோ வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும்.
பாரவூர்திகள்
வவுனியாவில் இருந்து கொழும்பு உட்பட தென்பகுதிகளுக்கு செல்லும் பாரவூர்திகள் அனுராதபுரம் மதவாச்சி மட்டுமே செல்லலாம் எனினும் திருகோணமலைக்கு வானங்களிற் செல்வதற்குத் தடை ஏதும் இல்லை. இத்தடைமூலம் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் தேவையற்ற நேரவிரயமும் ஏற்படுகின்றது.
தொடருந்து
வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்தும் வவுனியாவிற்குமான சேவைகள் இடம் பெறுகின்றன. புகையிரதப் பயணச் சீட்டுக்களை வவுனியா புகையிரத நிலையத்தில் 7 நாட்கள் முன்னையதாகவே காலை 7 மணிமுதல் காலை 10 மணிவரை செய்துகொள்ளவியலும்.
- கொழும்பு - வவுனியா (ரஜரட்ட ரெஜினா) - கொழும்பிலிருந்து மாலை 1:45
- கொழும்பு - வவுனியா (கடுகதி) - கொழும்பிலிருந்து மாலை 4:20
- கொழும்பு - வவுனியா (யாழ்தேவி) - கொழும்பிலிருந்து இரவு 10:00
பேருந்து
வவுனியாவிலிருத்தும் வவுனியாவிற்கும் தனியார் மற்றும் அரசாங்க பேருந்து சேவைகள் இடம் பெறுகின்றன.வவுனியாவிலிருந்து கொழும்பிற்கோ அல்லது கொழும்பிலிருந்து வவுனியாவிற்கோ இரவில் பயணம் செல்லும் பயணிகள் புத்தளமூடான பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் நடைபெறுவதால் இப்பாதையூடான பயணத்தைத் தவிர்த்தல் நல்லது. தவிர அதிகரித்துவரும் சோதனை நடைமுறைகளால் பெரும்பாலானவர்கள் தொடருந்திலேயே (Train) இல் பயணிப்பதையே விரும்புகின்றார்கள்.
- வவுனியா -மன்னார்
- வவுனியா - திருகோணமலை
- வவுனியா - மட்டக்களப்பு
- வவுனியா - அனுராதபுரம்
- வவுனியா -கொழும்பு (குருநாகல் மற்றும் புத்தளம் ஊடாக இருவேறு வழிகள்)
History
In ancient times Vavuniya is considered to be under the rule of The Vannimai kingdoms which existed in North and East of Sri Lanka[citation needed]. Most of the people from Jaffna, Kilinochchi, Mullaitivu due to never ending war settle down in Vavuniya and developed Vavuniya.
Demography
Most of the residents are Sri Lankan Tamils with a notable Sri Lankan Moors and Sinhalese presence. Because of the civil war many Tamils from Northern Districts migrated and settled in Vavuniya.
Economy
The town is now slowly returning to normalcy, traces of war are still apparent[citation needed].
Ethnic conflict
Vavuniya is a front line town in the ongoing war between the LTTE and the Sri Lankan Army. However, Vavuniya town and is under the government control. Clashes between different Tamil militant groups have resulted in instability in the city and those from the south of Sri Lanka do not visit it often.
There are internal refugees and passes are need to travel from government- to LTTE-controlled territory. The Sri Lankan Army is in constant patrol and heavy security is apparent
Please join our community in orkut (google service)
Join our instructor's blog know about our city
http://vavuniyatamil.blogspot.com/